'இரண்டு வானம்' படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்!

இப்படம் ஒரு ஃபேண்டசி ரொமான்டிக் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
'இரண்டு வானம்' படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்!
Published on

கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட், அம்மு அபிராமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராம் குமார் இயக்கத்தில் வெளியானது ‘ராட்சசன்’ திரைப்படம். இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து இயக்குனர் ராம் குமார் உடன் ‘இரண்டு வானம்’ படம் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ளார். கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஒரு ஃபேண்டசி ரொமான்டிக் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். 150 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில், ‘இரண்டு வானம்’ படத்தின் முதல் பாடலான ‘வெள்ளிச்சுடரே’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சத்யஜோதி நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com