தனுஷின் 'ஓம்' படத்தில் ஸ்ரீலீலாவுக்கு என்ன ரோல்?- கதாபாத்திர வீடியோ இதோ

சமீபத்தில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஓம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது.
 ஸ்ரீலீலா கதாபாத்திர வீடியா காட்சிகள்
Published on: 
Summary

தனுஷின் 'ஓம்' படத்தில் ஸ்ரீலீலா 'ரோஜா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மம்முட்டி, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 20-ஆம் தேதி வெளியீடாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து உள்ள படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகி உள்ள இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு

ஆக்‌ஷன் கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் ‘ஓம்’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். முன்னதாக இவரது இசையில் வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது பாடலான ‘செஞ்சுடரே’இன்று வெளியாக உள்ளது.

நவ.20-ல் வெளியீடு

‘ஓம்’ படம் முதலில் கடந்த மாதம் 16-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, வருகிற 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

சமீபத்தில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஓம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதில் நடிகை சாய் பல்லவி இப்படத்தில் நித்யா ரெட்டி என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரோஜா கதாபாத்திரம்

இந்த நிலையில், ‘ஓம்’ படத்தில் நடிகை ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா ‘ரோஜா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X