

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களைக் கொண்டு, தனது நடனம் மற்றும் எக்ஸ்பிரஷன்கள் மூலம் பிரபலமடைந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அமலா ஷாஜி, தற்போது தமிழ் திரைப்படத்துறையில் நடிகையாகக் களம் இறங்குகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலா ஷாஜி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குநர் சித்தார்த் இயக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இத்திரைப்படத்தில் கதாநாயகியாக சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார்.
தனது சினிமா நுழைவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள அமலா ஷாஜி, "நீண்ட நாட்களாக நான் கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது. இது ஒரு சிறிய தொடக்கமாக இருந்தாலும், எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த அரிய வாய்ப்பை வழங்கி எனது முதல் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் விக்ரம் பிரபு மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரல் ஸ்டாராக வலம் வந்த அமலா ஷாஜி, தற்போது வெள்ளித்திரைக்கு நுழைவது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், திரையுலகில் கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.