இஞ்சி - வெல்லம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சைத்ரா ஜே ஆச்சார் தற்போது இஞ்சி வெல்லம் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Inji Vellam
Published on: 
Summary

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் காதல் திரைப்படமான 'இஞ்சி வெல்லம்', அடுத்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் போஸ்டருடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மீண்டும் காதல் கதைக்களத்தில் மணிரத்னம்

தமிழ் சினிமாவில் பல காதல் காவியங்களைப் படைத்த இயக்குநர் மணிரத்னம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது அடையாளமான காதல் ஜானருக்கு இப்படத்தின் மூலம் திரும்பியுள்ளார். இப்படத்திற்குக் கதை எழுதி, சிவா ஆனந்த் உடன் இணைந்து தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் மணிரத்னம் தயாரிக்கிறார்.

'தக் லைஃப்' திரைப்படத்தைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரனும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் வெளியான 'மீசையை முறுக்கு 2' மற்றும் '418' ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கவனம் ஈர்த்த நடிகை சைத்ரா ஜே. ஆச்சார், 'இஞ்சி வெல்லம்' திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

மிரட்டலான தொழில்நுட்பக் குழு

இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியின் 19-வது படைப்பாக உருவாகி வரும் இப்படத்திற்கு, அவிக் முகோபாத்யாய் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

மேலும், ஷர்மிஷ்டா ராய் கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், பிருந்தா மாஸ்டர் நடன இயக்கத்தையும் கவனித்துக் கொள்கின்றனர்.

இப்படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும், பாடல்கள் உரிமையை சோனி மியூசிக் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

விஜய் சேதுபதி - சாய் பல்லவியின் அடுத்தடுத்த படங்கள்

'இஞ்சி வெல்லம்' படத்திற்கு முன்பாக, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ட்ரெயின்' திரைப்படம் வருகிற டிசம்பர் 4-ம் தேதியும், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாக்கெட் நாவல்' திரைப்படம் மற்றும் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.

'அமரன்' வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் 'மாரி 2' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் ஆகியோருடன் சாய் பல்லவி மீண்டும் இணைந்துள்ள 'ஓம் – அத்தியாயம் 1: உதிரம் – தி பிளட் வுட்' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X