

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘இம்மார்டல்’ திரைப்படம், திரையரங்க வெற்றியைத் தொடர்ந்து, வரும் 30-ந்தேதி முதல் Sony Liv ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இம்மார்டல்’ (Immortal).
ஏ.கே. பிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இவர்களுடன் டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா சாம்சோ, சுனிதா ஸ்ரேஸ்தா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது திரையரங்க வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் ஓ.டி.டி வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘இம்மார்டல்’ திரைப்படம் வரும் 30-ந்தேதி முதல் Sony Liv ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள் மற்றும் மீண்டும் காண விரும்பும் சினிமா விரும்பிகள் இப்படத்தை ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.