ப்ளடி பெக்கர் கதாநாயகனாக கவின் சரிப்பட்டுவரமாட்டானு நெனச்சேன் - நெல்சன்

இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
ப்ளடி பெக்கர் கதாநாயகனாக கவின் சரிப்பட்டுவரமாட்டானு நெனச்சேன் - நெல்சன்
Published on

இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெல்சன் பேசியதாவது " முதலில் இப்படத்திற்கு கதாநாயகனாக கவின் வேணும் என இயக்குனர் சிவபாலன் கூறும் போது நான் அதை மறுத்தேன் அப்பொழுது கவினின் டாடா திரைப்படம் வெளியாகவில்லை. சிவபாலனிடம் நீ நட்புக்காக எதுவும் செய்ய வேண்டாம் அதை தனியாக செய்துக்கொள் என்றேன். ஆனாலும் அவன் பிடிவாதமாக எனக்கு கவின் தான் கதாநாயகனாக வேண்டும் என்றான். படப்பிடிப்பு பணி முடித்தப்பின் திரைப்படத்தை பார்த்த பிறகுதான் தெரிகிறது. கவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த கதாப்பாத்திரத்தில் இவரை தவிர வேறு ஒருவரை பொறுத்தி பார்க்க முடியவில்லை. இதற்குமுன் இப்படத்திற்கு நடிகர் தனுஷ் அல்லது விஜய் சேதுபதியைதான் நடிக்க வைக்க வேண்டும் என இருந்தேன்" என கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com