அயோத்தி பட வாய்ப்ப மிஸ் பண்ணதுக்கு வருத்தபடுறேன் - ஆர் ஜே பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அயோத்தி பட வாய்ப்ப மிஸ் பண்ணதுக்கு  வருத்தபடுறேன் - ஆர் ஜே பாலாஜி
Published on

நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

படத்தின் டிரெயிலர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது. ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடைப்பெற்ற கலந்துக் கொண்ட ஆர்.ஜே பாலாஜி சில சுவாரசிய தகவல்களை கூறினார். அதில் " சசிகுமார் நடித்து வெற்றிப்படமாக அமைந்த அயோத்தி திரைப்படத்தின் வாய்ப்பு முதலில் தனக்கு வந்தது ஆனால்ம் அப்பொழுது இருந்த சூழ்நிலையில் என்னால் நடிக்க முடியவில்லை. அப்படத்தை நான் மிஸ் பண்ணதுக்காக வருத்தம் எனக்குள் இருக்கிறது " என கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com