திரையுலகை விட்டு விலகிய பின் ஸ்பெயினில் ஊபர் டிரைவர் ஆவேன்: பகத் பாசில் ஓபன் டாக்!

தனது மனைவி நஸ்ரியாவிடமும் இதுகுறித்து பேசி ஒப்புதல் பெற்றதாக அவர் தெரிவித்திருந்தார்.
Fahadh Faasil
Published on: 
Summary

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பகத் பாசில், சினிமா வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஸ்பெயின் நாட்டில் ஊபர் டாக்சி டிரைவராக பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பகத் பாசில் தனது ஓய்வு காலத் திட்டம் குறித்துப் பேசுகையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்குச் சென்று ஊபர் டிரைவராக மாற விரும்புவதாகக் கூறியிருந்தார். தனது மனைவி நஸ்ரியாவிடமும் இதுகுறித்து பேசி ஒப்புதல் பெற்றதாக அவர் தெரிவித்திருந்தார். சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்த முடிவில் தனக்கு இன்னமும் எந்த மாற்றமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தனது இந்த வித்தியாசமான ஆசை குறித்து விளக்கிய பகத் பாசில், "திரையுலகிலும் மக்களிடமிருந்தும் எனக்கு ஓய்வு கிடைக்கும் போது நிச்சயமாக இதைச் செய்வேன். நகைச்சுவையைத் தாண்டி, ஒரு மனிதரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதும், அவர்களின் இலக்கை அடைவதைப் பார்ப்பதும் மிகவும் அழகான அனுபவம்" என்று தெரிவித்துள்ளார்.

டிரைவிங் மீதான காதல்

எனக்கு நீண்ட தூரம் வாகனம் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அது எனக்குச் சிந்திக்கவும், தனிமையை ரசிக்கவும் வழிவகுக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் இப்போதும் காரை எடுத்துக்கொண்டு பயணிக்கத் தவறுவதில்லை. "மக்களுக்கு என் மீது அலுப்பு ஏற்பட்டு, என்னை இனி திரையில் பார்க்க விரும்பாத நிலை வரும்போது, நான் அமைதியாக பார்சிலோனா சென்று எனது இந்த ஊபர் டிரைவர் கனவை நனவாக்குவேன்" என்று அவர் சிரித்தபடியே கூறியுள்ளார். முன்னணி நடிகராக உச்சத்தில் இருக்கும் போதே, ஓய்வு காலத்தைப் பற்றி இவ்வளவு எளிமையான எண்ணத்தைக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசிகர்கள் வியப்படைந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com