நாளை ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் 'ரணபாலி' Pre-Release Event!

'ஷியாம் சிங்கா ராய்' திரைப்பட புகழ் ராகுல் சங்கிருத்தியன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
Ranabaali PreReleaseEvent
Published on: 
Summary

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆக்ஷன் திரைப்படம் 'ரணபலி'.

இப்படத்தின் பிரம்மாண்ட ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் நாளை மாலை 5:00 மணி முதல் ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற 'ஷில்பகலா வேதிகா' அரங்கில் நடைபெறவுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் அக்டோபர் 16 அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.

படக்குழு

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா -விற்கு ஜோடியாக அவரது மனைவி ராஷ்மிகா மந்தனா மற்றும் திரைபிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

'ஷியாம் சிங்கா ராய்' திரைப்பட புகழ் ராகுல் சங்கிருத்தியன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர் மற்றும் டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் சார்பில் குல்ஷன் குமார், பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் இரட்டையர்களான அஜய்-அதுல் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஆக்ரோஷமான தோற்றத்திலும் 'ரணபலி' ஒரு வரலாற்று கதை வடிவில் எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

நாளை நடக்கும் விழாவில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com