டெட்பூல் & வோல்வரின் படத்தை கொண்டாடும் ஐதராபாத் ரசிகர்கள் - வீடியோ பகிர்ந்த ஹக் ஜேக்மேன்

டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.இப்படம் வரும் 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது.
டெட்பூல் & வோல்வரின் படத்தை கொண்டாடும் ஐதராபாத் ரசிகர்கள் - வீடியோ பகிர்ந்த ஹக் ஜேக்மேன்
Published on

மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது Deadpool & Wolverine என்ற படம் வெளியாக உள்ளது.

ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் வரும் வாரம் வெளியாகவுள்ள டெட்பூல் & வோல்வரின் படத்திற்கான கொண்டாட்டங்களில் இந்திய ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

டெட்பூல் & வோல்வரின் படம் வெளியாவதை ஒட்டி ஐதராபாத்தில் இப்படத்தின் மிகப்பெரிய கட் அவுட்களை வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஹக் ஜேக்மேன் பகிர்ந்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com