ஹரிஷ் கல்யாணின் HK 15 படப்பிடிப்பு தொடக்கம்

வினீத் பிரசன்னா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
ஹரிஷ் கல்யாணின் HK 15 படப்பிடிப்பு தொடக்கம்
Published on

2021 ஆம் ஆண்டு வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் மற்றும் அம்ரிதா ஐயர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் லிஃப்ட். இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இயக்குனரான வினீத் பிரசன்னா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். இதனை போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது. இது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 15- வது திரைப்படமாகும். படக்குழு வெளியிட்ட போஸ்டரில் முகத்தில் காயங்களுடன் கையில் ஆயுதத்துடன் இருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது. இப்படத்தின் கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. பலதரப்பட்ட மக்களால் திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து டீசல் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com