

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் (Primeshow Entertainment) நிறுவனம், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் 'ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்' (HanuMan 2: The Rise of Vanaras) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஹனு-மேன் திரைப்படத்தை உருவாக்கியவர்களின் பிரம்மாண்டமான கற்பனைப் படைப்பில், ஹனு-மேன் யுனிவர்ஸின் (HanuMan Universe) புதிய அடுத்த அத்தியாயமானது விரிவான படைப்பாக உருவாகிறது.
இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கற்பனையைக் கவர்ந்த 'ஹனு-மேன்' திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து,'ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ் உருவாகிறது.
இளம் நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தனது அடுத்த பிரம்மாண்டமான முயற்சியான 'ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்' திரைப்படத்தை இந்தத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரு பிரம்மாண்டமான கற்பனைப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படம், புராணங்கள், கற்பனை மற்றும் அசாதாரணமான சினிமா சாத்தியக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட வசீகரிக்கும் புதிய உலகத்திற்கான கதவுகளைத் திறக்கும் என உறுதியளிக்கிறது.
இந்தத் திரைப்படத்தைப் பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.. பார்வையாளர்களுக்கு அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன், தங்களது படைப்புகளை மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கி வரும் இவர்கள், மீண்டும் ஒரு பிரம்மாண்டமான சினிமா முயற்சிக்குத் தயாராகி வருகிறார்கள்.
மேகங்களுக்கு நடுவே அனுமனின் பிரம்மாண்ட தெய்வீக உருவம் தோன்ற, வானிலிருந்து இறங்கும் ஒரு பெரிய வானரத்தின் வால் காவி உடை அணிந்திருக்கும் வைஷ்ணவ் தேஜைச் சுற்றி மேலே தூக்குவது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது
பான்-இந்தியா (Pan-India) திரைப்படமாக உருவாகும் இது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கும் 'ஜெய் ஹனுமான்' திரைப்படம் ஒருபுறம் உருவாகி வரும் நிலையில், 'ஹனு-மேன்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் இந்தப் புதிய ஃபேன்டஸி அத்தியாயத்தைத் தனிப் பாதையில் முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது