லியோ படத்தை தொடர்ந்து விஜயுடன் இணையும் GVM

தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதை படக்குழு அறிவித்தது
லியோ படத்தை தொடர்ந்து விஜயுடன் இணையும் GVM
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 69" என தலைப்பிடப்பட்டு உள்ளது.

இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார். தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். 'அனிமல்' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதை படக்குழு அறிவித்தது. பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மமிதா பைஜூ நடிப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது.

தற்பொழுது படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த லியோ படத்தில் விஜய் மற்றும் கவுதம் மேனன் ஒன்றாக நடித்து இருந்தனர்.

அதைத்தொடர்ந்து தற்பொழுது தளபதி 69 படத்தில் நடித்துள்ளார். கவுதம் மேனன் அண்மையில் மழை பிடிக்காத மனிதன் திரைப்பத்தில் நடித்து இருந்தார் மேலும் மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com