ஜி.வி. பிரகாஷ் இசை நிறுவனம் கைப்பற்றிய 'என்ன விலை' படத்தின் ஆடியோ உரிமை!

என்ன விலை திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.
Enna Vilai Movie
Published on
Summary

தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்ன விலை' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், தனது இசை நிறுவனம் மூலம் சக இசையமைப்பாளர்களின் படைப்புகளை ஊக்குவித்து வருகிறார்.

அந்த வகையில், சாம் சி.எஸ். இசையமைத்துள்ள 'என்ன விலை' படத்தின் ஆடியோ உரிமையை அவர் பெற்றுள்ளார். இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலாமயா சினிவெர்ஸ் சார்பில் ஜிதேஷ் விஸ்வாம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் தயாரித்துள்ளனர்.

'கடலாடும்' பாடல் ரிலீஸ்

இப்படத்தின் முதல் பாடலான 'கடலாடும்' ஏற்கனவே ஜி.வி. பிரகாஷின் அதிகாரப்பூர்வ இசைத் தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அந்தோணி தாசன் பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சர்வதேச விருதுகளை குவித்த 'என்ன விலை':

இப்படம் ஏற்கனவே சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஜெர்மனியின் மேன்ஹெய்ம் ஆர்ட் அண்ட் ஃபிலிம் பெஸ்டிவலில் சிறந்த திரைப்பட விருதையும், தாதாசாகேப் பால்கே சர்வதேச விழாவில் சிறந்த திரைக்கதை விருதையும் வென்றுள்ளது.

மேலும் இஸ்தான்புல் கயா மற்றும் அட்லாண்டா இந்திய திரைப்பட விழாக்களிலும் தேர்வாகியுள்ளது.

கருணாஸின் 25-வது ஆண்டு திரைப்பயணத்தில் வெளியாகும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com