அதிரடி அரசியல் திரில்லர்: கௌதம் கார்த்திக் - செல்வராகவன் நடிக்கும் 'பிளடி பாலிடிக்ஸ்' டீசர் வெளியானது!

இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
Bloody Politics Teaser
Published on
Summary

நடிகர் கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பிளடி பாலிடிக்ஸ்' திரைப்படத்தின் அதிரடியான டீசர் வெளியாகியுள்ளது.

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கௌதம் கார்த்திக்குிற்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வரும் வேளையில், இந்த டீசர் ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

அறிமுக இயக்குனர் தினா ராகவன் இயக்கிய இத்திரைப்படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த டீசரைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கும், பிறந்தநாள் காணும் கௌதம் கார்த்திக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் பரிசாக அமைந்த டீசர் காட்டும் அரசியல் களம்

107 வினாடிகள் (1 நிமிடம் 47 நொடிகள்) ஓடக்கூடிய இந்த டீசர், பிறந்தநாளை கொண்டாடும் கௌதம் கார்த்திக்கை ஒரு ஆக்ரோஷமான மற்றும் லட்சியம் கொண்ட இளம் அரசியல்வாதியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அறிமுகப்படுத்துகிறது.

'இளையா' என்று இப்படத்தில் கெளதம் கார்த்திக்கு பெயரிடப்பட்டுள்ளது.

மக்களிடையே இருக்கும் பிரபலம் எப்படி வாக்குகளாக மாறுகிறது என்பது போன்ற வசனங்கள் டீசரில் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தத் திரைப்படம் தமிழக அரசியல் சூழலை தெரிவிக்கின்றன. படத்தில் இயக்குனர் செல்வராகவன் இரக்கமற்ற ஒரு மூத்த அரசியல்வாதி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.

பின்னணி மற்றும் கதைக்களம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜு முருகனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தினா ராகவன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தென் சென்னை பகுதியின் அடிமட்ட அரசியல் மற்றும் அங்கு வாழும் மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் அழுத்தமான அரசியல் வசனங்களை இயக்குனர் ராஜு முருகன் எழுதியுள்ளார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

தயாரிப்பு மற்றும் நட்சத்திர பட்டாளம்

இப்படத்தை 'டிராஃப்ட் பை ஜிகேபி' நிறுவனம் சார்பில் கணேஷ் கே. பாபு தயாரித்துள்ளார். சஞ்சய் முத்துக்குமார் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தில் கௌதம் கார்த்திக், செல்வராகவனுடன் இணைந்து பிரபல இயக்குனர் பி. வாசு, அஞ்சனா நேத்ரன், ராபி, ஏ. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, வி.ஐ.எஸ் ஜெயபாலன், ஆதித்யா கதிர் மற்றும் பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவையும், தீபக் எஸ் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

'பிளடி பாலிடிக்ஸ்' படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் திரையரங்கு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகளைப் படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com