மீண்டும் வசூல் சாதனை படைத்த கில்லி

ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கில்லி படத்தை பார்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மீண்டும் வசூல் சாதனை படைத்த கில்லி
Published on

விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான படம் கில்லி. படத்தில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷா, முத்துபாண்டி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், விஜய் தங்கையாக ஜெனிபர், ஓட்டேரி நரி கதாபாத்திரத்தில் தாமு உள்பட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் இடம் பெற்ற 'அப்படிபோடு' பாடல் அரங்கையே அதிர வைத்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 'கில்லி' படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கில்லி படம் வெளியான திரையரங்கங்கள் அனைத்தும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கில்லி படத்தை பார்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வெளியாகி இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா அவர்களின் சமூக வலைத்தள பக்கத்தில் அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பதிவிட்டிருந்தனர்.

இதையடுத்து கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்த அத்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், டைரக்டர் தரணி ஆகியோர் தி. கோட் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்து பாராட்டினர்.

மேலும் விஜய்யிடம் சக்திவேலன் பேசுகையில், சினிமாவை விட்டு முழுவதும் விலக வேண்டாம். வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்கள். வியாபாரத்துக்காக சொல்லவில்லை. தியேட்டரில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பாருங்கள் நான் உங்களின் ரசிகன்னாக கேட்கிறேன் என கோரிக்கை வைத்தார்.

இதைக்கேட்ட விஜய் சிரித்தபடி தலையசைத்து கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி டிரெண்டிங்காகி வருகிறது.

படம் பற்றி இயக்குனர் தரணி கூறியதாவது "கில்லி படத்தை இந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் பார்த்து விட்டு மகிழ்ந்து செல்வார்கள் என நினைத்தேன்.

படத்தில் உள்ள ஒவ்வொரு வசனத்தையும் படம் பார்க்கும் போது உச்சரிக்கிறார்கள். ரசிகர்கள் அதிகம் பார்த்த விஜய் படம் கில்லி படம்தான். அனைவருக்கும் நான் ரொம்ப கடமைபட்டுள்ளேன்" என்று கூறினார்.

படத்தில் விஜய் தங்கையாக நடித்த ஜெனிபர் கில்லி படம் மீண்டும் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "என் குழந்தை பருவத்தில் இருந்து நான் செய்ததை நினைத்து மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன் தளபதி" என பதிவிட்டுள்ளார். ஜெனிபர் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com