மாதவனின் 'GDN' படத்தின் புது அப்டேட்!

இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவனின் 'GDN' படத்தின் புது அப்டேட்!
Published on

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘ஓஹோ எந்தன் பேபி’ பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. போஸ்டரில் அடையாளம் தெரியாத அளவுக்கு வயதான தோற்றத்துடன் ஜி.டி.நாயுடுவின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாதவன் காணப்பட்டார். இப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘ஜி.டி.என்’ படத்தின் வெளியீட்டு தேதியை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘ஜி.டி.என்’ படம் ஜூலை மாதம் 17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com