

மரகத நாணயம் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக, படத்தின் தயாரிப்பாளர்கள் குழு அறிவித்துள்ளது.
2017ம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ படத்தின் தொடர்ச்சியே ‘மரகத நாணயம் 2’. 2023ம் ஆண்டு இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி, கடந்த பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கியது.
முதல் பாகத்தின் இயக்குநர் ஏ.கே. சரவணனே, இந்த பாகத்தையும் எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், சத்யராஜ், பிரியா பவானி சங்கர், டேனியல் அன்னி போப், அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் சுதன் சுந்தரம் படத்தை தயாரித்துள்ளார்.