

விஜய் சேதுபதியின் ஸ்லம்டாக் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்தியா திரைப்படமான 'ஸ்லம்டாக் - 33 டெம்பிள் ரோடு' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகந்நாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பூரி ஜெகந்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆக்ஷன் என்டர்டெய்னரில் விஜய் சேதுபதி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மூத்த நடிகைகள் தபு, ஜரினா வஹாப் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டதாகவும், திரையரங்குகளில் ரசிகர்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தத் தயாராக இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
படத்தின் பின்னணிப் பணிகள் தற்போது அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.