அஜித்தின் ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு தொடக்கம்: இணைந்தார் உன்னி முகுந்தன்!

‘டேர்டெவில்’ படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
Unni Mukundan -Ajith
Published on: 
Summary

‘டேர்டெவில்’ படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இப்படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மனைவியும், பிரபல நடிகையுமான ஷாலினி அஜித்குமார் ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்சன்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்குகிறார்.

‘குட் பேட் அக்ளி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் புதிய படமான ‘டேர்டெவில்’ படத்தின் அதிகாரப்பூர்வப் பணிகள் பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் பிற முக்கியப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறவுள்ள நிலையில், இப்படத்தில் இணைத்துள்ள புதிய நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

‘டேர்டெவில்’ படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இப்படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மனைவியும், பிரபல நடிகையுமான ஷாலினி அஜித்குமார் ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்சன்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்குகிறார். இந்த விழாவில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ஸ்ரீலீலா ஆகியோர் கலந்துகொண்டு படத்தில் இணைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரபு, பார்த்திபன், சுனில் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல பிரபலங்களும் இப்படத்தின் நட்சத்திரக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.

‘விடாமுயற்சி’ படத்தைத் தொடர்ந்து, இப்படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அஜித்தின் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக அமையவுள்ள இப்படத்திற்கு ‘டேர்டெவில்’ என்ற தலைப்பை நடிகர் அஜித்தே பரிந்துரைத்துள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அண்மையில் தெரிவித்துள்ளார். அவரது துணிச்சலான ரேஸ் கரியர் மற்றும் நிஜ வாழ்க்கைப் பயணத்திற்குப் பொருத்தமானதாக இந்தத் தலைப்பு அமைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

முன் தயாரிப்புப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், நவம்பர் மாத நடுப்பகுதியில் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ‘குட் பேட் அக்ளி’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஒரு முழுமையான ஆக்‌ஷன் விருந்தாக இப்படம் உருவாகவுள்ளது. அஜித்தின் மிரட்டலான தோற்றம் மற்றும் நட்சத்திரங்களின் குவிப்வால் ‘டேர்டெவில்’ படத்தின் மீது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

X