"ரசிகர்கள் இல்லையென்றால் பிரபலங்கள் பூஜ்ஜியம்" - ஆலியா பட்டின் மெய்க்காப்பாளர் செயலால் வெடித்த நெட்டிசன்களின் கோபம்!

மௌனம் காத்த ஆலியா பட்டின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Alia Bhatt
Published on
Summary

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகையான ஆலியா பட், தனது புதிய திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வந்திருந்தார்.

இந்த விழாவிற்கு அவர் தனது சகோதரி ஷாகின் பட் உடன் வருகை தந்திருந்தார். விழா மிகச் சிறப்பாக முடிவடைந்த நிலையில், அவர் அரங்கில் இருந்து வெளியேறி தனது காரை நோக்கிச் சென்றபோது இந்த சர்ச்சை சம்பவம் அரங்கேறியுள்ளது.

செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த அவமானம்!

ஆலியா பட்டை நேரில் கண்டதும் உற்சாகமடைந்த ஏராளமான ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முண்டியடித்தனர். அப்போது அங்கு கூடி நின்ற கூட்டத்தில் இருந்த ஒரு தீவிர ரசிகர், ஆலியா பட்டுடன் மிக அருகில் நின்று ஒரு செல்பி எடுக்க முயன்றார்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஆலியா பட்டின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர் , அந்த ரசிகரை இரண்டு முறை மிகக் கொடூரமாகப் பிடித்து பின்னோக்கித் தள்ளிவிட்டார்.

இந்தத் தள்ளுமுள்ளு சம்பவத்தின் போது நடிகை ஆலியா பட், மெய்க்காப்பாளரைத் தடுக்காமல் அமைதியாகத் தனது காரை நோக்கி நடந்து சென்று ஏறியதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

ரசிகர் தள்ளிவிடப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி அங்கிருந்த கேமராக்களில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

நெட்டிசன்களின் காட்டமான விமர்சனங்கள்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இணையவாசிகள் பிரபலங்களின் பின்னால் ஓடும் ரசிகர்களை நோக்கியும், அந்த மெய்க்காப்பாளரின் அநாகரிகச் செயலைக் கண்டித்தும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

"பிரபலங்களுடன் ஒரு புகைப்படம் எடுப்பதற்காக உங்களை நீங்களே ஏன் இப்படிப் பிறர் முன்னிலையில் அவமானப்படுத்திக் கொள்கிறீர்கள்? உங்கள் சுயமரியாதையை இழக்காதீர்கள்" என ரசிகர்கள் சிலருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

மேலும் "பிரபலங்களின் புகழுக்கு இந்த ரசிகர்கள்தானே காரணம்? ரசிகர்கள் இல்லையென்றால் இந்த பிரபலங்கள் ஒன்றும் கிடையாது என்பதை அவர்கள் உணர வேண்டும்" எனச் சிலர் காட்டமாக விமர்சித்துள்ளனர்.

தன் கண் முன்னே ஒரு ரசிகர் தள்ளிவிடப்படும் போது, அதைத் தடுத்து நிறுத்தாமல் மௌனம் காத்த ஆலியா பட்டின் மீதும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாலிவுட் வட்டாரத்தில் இந்த 'பாடிகார்டு' சர்ச்சை தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com