பெருசு படத்தை ரீமேக் செய்யும் பிரபல இந்தி இயக்குனர்

ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார்
பெருசு படத்தை  ரீமேக் செய்யும் பிரபல இந்தி இயக்குனர்
Published on

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்திரைப்படம் டெண்டிகோ என்ற சிங்கள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் இளங்கோ ராமே இயக்கியுள்ளார்.

இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்தியில் ஹன்சல் மேத்தா இயக்க சாகில் சைகல் படத்தை தயாரிக்கவுள்ளார்.படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை. இதுக்குறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com