புத்தாண்டு விருந்தாக வெளியாகும் பகத் பாசில் - பிரேம்குமார் கூட்டணியின் 'அசரீரி'

பகத் பாசிலுக்கு ஜோடியாக 'நெடுஞ்சாலை', 'கருடன்' படங்களில் நடித்து பேசப்பட்ட ஷிவதா நடிக்கிறார்.
புத்தாண்டு விருந்தாக வெளியாகும் பகத் பாசில் - பிரேம்குமார் கூட்டணியின் 'அசரீரி'
Published on: 
Summary

பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்கும் 'அசரீரி' திரைப்படம், திரில்லர் கதைக்களத்துடன் ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வருகிறது. ஷிவதா, சேத்தன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

'96' திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் பிரேம்குமார். அதனைத்தொடர்ந்து 'மெய்யழகன்' திரைப்படத்தின் மூலம் தனது முத்திரையை இன்னும் ஆழமாக பதித்தார். விரைவில் '96' படத்தின் அடுத்த பாகத்தை இயக்கப் போவதாக பேச்சு அடிபட்டது.

அசரீரி

இதற்கிடையில் பிரேம்குமாரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி பிரேம்குமார் இயக்கும் புதிய படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரும், வில்லத்தனத்தில் கலக்கி வருபவருமான பகத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு 'அசரீரி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புத்தாண்டு ரிலீஸ்

பகத் பாசிலுக்கு ஜோடியாக 'நெடுஞ்சாலை', 'கருடன்' படங்களில் நடித்து பேசப்பட்ட ஷிவதா நடிக்கிறார். சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

திரில்லர் கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாகி வரும் ‘அசரீரி’ அடுத்த ஆண்டில் ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வருகிறது.

X