பகத் பாசில் - அர்ஜுன் தாஸ் இணையும் மலையாள படம் - `துடரும்' இயக்குனரின் அடுத்த சம்பவம்

துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். தருண் மூர்த்தி இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
பகத் பாசில் - அர்ஜுன் தாஸ் இணையும் மலையாள படம் - `துடரும்' இயக்குனரின் அடுத்த சம்பவம்
Published on

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். திரைப்படம் இதுவரை வசூலில் உலகளவில் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது.

துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து தருண் மூர்த்தி இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இவர் அடுத்ததாக டார்பிடோ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நஸ்லென், அர்ஜுன் தாஸ் மற்றும் கணபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். நஸ்லென் நடிப்பில் அண்மையில் வெளியான ஆலப்புழா ஜிம்கானா திரைப்படம் வெற்றிப்பெற்றது. படத்தில் கமிட் ஆகியிருக்கும் நடிகர்களின் காம்போவே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் எம்மாதிரியான கதைக்களத்தில் உருவாக இருக்கிறது என தெரியவில்லை.

டார்பிடோ என்ற சொல்லுக்கு கடலுக்கு அடியில் செல்லும் தானியங்கி ஏவுகணை என்பது பொருள்.

இப்படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரிக்கவுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜிம்ஷி காலித் செய்கிறார். படத்தின் இசையை சுஷின் ஷ்யாம் மெற்கொள்கிறார். திரைப்படத்தின் பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com