'எலக்சன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எலக்சன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. 'எலக்சன்' என்ற தலைப்பிற்கு ஏற்றார் போல் படம் முழுவதும் அரசியலை பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது.
'எலக்சன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

'உறியடி', 'ஃபைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எலக்சன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

'சேத்துமான்' புகழ் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜயகுமாருடன் பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' தயாரித்து வருகிறது. படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து உள்ளன.

'எலக்சன்' என்ற தலைப்பிற்கு ஏற்றார் போல் படம் முழுவதும் அரசியலை பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 'எலக்சன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com