

விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் 'பாக்கெட் நாவல்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இளையராஜா இசையமைக்கும் இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், ஜப்பானிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாக்கெட் நாவல்’. ஏற்கனவே ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு தேசிய விருது பெற்ற இந்தக் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இளையராஜா இசையில் உருவாகும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.
இதனை தொடர்ந்து ‘பாக்கெட் நாவல்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இதனால் இந்த ஆண்டு இறுதியில் ‘பாக்கெட் நாவல்’ படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். தியாகராஜன் குமாரராஜாவின் 'டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட்' (Tyler Durden and Kino Fist) நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.