'ட்ரோன்ஸ்' திரைப்படம் அக்டோபர் 16 -ல் வெளியாகிறது!

ஜெயிலர் 2, அப்ப குட்டி உடன் மோதும் ராகவ் மிர்தாத்தின் ட்ரோன்ஸ்.
Drones
Published on: 
Summary

'பன் பட்டர் ஜாம்' திரைப்படத்தின் இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த புதிய திரைப்படத்திற்கு 'ட்ரோன்ஸ்' (Drones) என பெயரிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் வரும் அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதியும், விஜய் ஆண்டனியின் 'அப்ப குட்டி' திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதியும் வெளியாகவுள்ள நிலையில், அவற்றுடன் இணைந்து இந்த 'ட்ரோன்ஸ்' திரைப்படமும் வெளியாகிறது.

நட்சத்திர பட்டாளம்

ராகவ் மிர்தாத் இயக்கம் இப்படத்தில் சித்தி இத்னானி மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து திராவிட் செல்வம், தேவதர்ஷினி, குரேஷி, 'சினிமாவாலா' சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், 'சினிமாவாலா' சதீஷ் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளார்.

தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பக் குழு

இப்படத்தை ஜி.எம். மார்கன் பிலிம்ஸ் பேனரின் கீழ் ஜி.எம். மார்கன் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவனும், படத்தொகுப்பு (எடிட்டிங்) சதீஷ் சூர்யா, கலை இயக்கம் (ஆர்ட்) ஆர். கிஷோர் மற்றும் சண்டைப்பயிற்சியை பிசி ஸ்டண்ட்ஸ் ஆகியோரும் கையாண்டுள்ளனர்.

மேலும், வித்தியாசமான ஒரு கதைக்களத்தை கொண்டுள்ள இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இயக்குனர் ராகவ் மிர்தாத்தின் முந்தைய படம்

இயக்குனர் ராகவ் மிர்தாத் இதற்கு முன்பு 'பன் பட்டர் ஜாம்' (2025) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

நடிகர் ராஜு ஜெயமோகன் மற்றும் பவ்யா த்ரிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இப்படம், தங்களது மகன் மற்றும் மகளை காதலில் சேர்க்க முயலும் இரு தாய்களின் கதையை நகைச்சுவையாக விவரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com