

ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் ஆர். சிவராமன் தயாரிப்பில் உருவாகும் 'Production No 1' திரைப்படமான 'லவ் லாக்' (Love Lock) படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இணையத் தொடர்கள் மற்றும் 'மொத ராத்திரி' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் D.K. கார்த்திகேயன் இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், தமிழக முதல்வர் விஜயுடன் மூன்று படங்களில் ஜோடியாக நடித்து புகழ்பெற்ற பிரபல நடிகை கௌசல்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் ஒரு அழுத்தமான, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் எட்வின் GJ இயக்கும் இத்திரைப்படம் ஒரு ஃபீல்-குட் 'லவ் டிராமா' ஜானரில் உருவாகிறது. இதில் D.K. கார்த்திகேயன், கௌசல்யா, லாவண்யா அன்பழகன், ராஜ் MRK, அன்பழகன், ரமா, உதய் மகேஷ், அஜித் கோஷி, தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு ரசோமிகின்ஒளிப்பதிவு செய்ய, மூன்ராக்ஸ் இசையமைக்கிறார்; மேலும், படத்தொகுப்பு பணிகளை அர்ஜுன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை எஸ்.ஏ. ராஜா கவனிக்கிறார்.
இத்திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சென்னையிலேயே ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். புதிய தயாரிப்பு நிறுவனம், திறமையான இளைஞர்கள் மற்றும் நட்சத்திரப் பட்டாளங்களின் கூட்டணியில் உருவாகும் 'லவ் லாக்' கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.