தீபாவளி ஸ்பெஷல்: ‘ராமாயணா’ படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
தீபாவளி ஸ்பெஷல்: ‘ராமாயணா’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Published on

இந்தியாவின் பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு திரைப்படம் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ராமாயணா’.

இந்துக்களின் இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த வரலாற்று திரைப்படத்தில் பாலிவுட் புகழ் ரன்பீர் கபூர், யாஷ், சாய்பல்லவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் இரண்டு பாகமாக உருவாகி உள்ளது. முதல் முதல் பாகம், ராமர் மற்றும் சீதையின் வனவாச கால வாழ்க்கையையும், ராவணனால் சீதை கடத்தப்பட்டதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளையும் விவரிக்கிறது.

சமீபத்தில் முதல் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் பாகம் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளியின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் படத்தை தயாரித்துள்ள நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளனர்.

இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் படம் வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com