பிரம்ம முகூர்த்தத்தில் நாளை மறுநாள் அதிகாலையில் வெளியாகிறது ‘ராமாயணா’ டிரெய்லர்!

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த வரலாற்று புனைவுக்கதையின் முதல் பாகம் தீபாவளியை ஒட்டி வெளியாக உள்ளது.
பிரம்ம முகூர்த்தத்தில் நாளை மறுநாள் அதிகாலையில்  வெளியாகிறது ‘ராமாயணா’ டிரெய்லர்!
Published on

இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் ஜூலை.30ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

“மங்களகரமான பிரம்ம முகூர்த்தத்தில் , ஜூலை 30, வியாழக்கிழமை அன்று, இந்திய நேரப்படி அதிகாலை 4:15 மணிக்கு உலகெங்கிலும் எங்களின் டிரெய்லருடன் ராமாயணத்தின் உதயத்தை வரவேற்கிறோம்” என படக்குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்த டிரெய்லர் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்பொழுது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமாயணா

ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார்.

ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com