தவெக முதல் மாநாடு.. தலைவர் விஜய்க்கு வீடியோ பகிர்ந்து வாழ்த்து சொன்ன இயக்குனர் வெங்கட் பிரபு

வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்த உள்ளார். விஜய் கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் மாநாட்டில் கலந்துகொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்தார்.
தவெக முதல் மாநாடு.. தலைவர் விஜய்க்கு வீடியோ பகிர்ந்து  வாழ்த்து சொன்ன இயக்குனர் வெங்கட் பிரபு
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தி கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.455 கோடி வரை வசூலை எடுத்தது. அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் தனது 69 படத்தில் கமிட்டாகி உள்ளார். இதுவே விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரியில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்த உள்ளார். விக்ரவாண்டியில் வைத்து நடைபெற உள்ள இந்த மாநாடு பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.

இந்த மாநாடு விஜய்யின் அரசியல் எழுச்சிக்குத் துவக்கப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. எனவே விஜய் மாநாட்டுக்கு எல்லா தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் வந்துகொண்டிருக்கிறது. விஜய் கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் மாநாட்டில் கலந்துகொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்தார்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யின் மாநாடு சிறக்க வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு, அண்ணா @actorvijay உங்களின் முன்னாள் உள்ள நீண்ட நெடிய பயணத்துக்கு எனது வாழ்த்துகள். எங்கள் எல்லோருக்கும் நீங்கள் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் #TheGreatestOfAllTime என்று கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com