மாரி செல்வராஜின் ”மஞ்சணத்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்.
director maari selvaraj
Published on

மஞ்சணத்தி

மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி திரைப்படத்தை இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்தார். இது குறித்து இயககுநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:-

இன்று முதல் மஞ்சணத்தியின் தினங்களை தொடங்கி வைத்த எங்கள் இசைஞானிக்கு என்றைக்குமான எங்கள் நன்றியும் அன்பும் என்று தெரிவித்துள்ளார்.

தயாரிப்பு

இந்த திரைப்படத்தினை மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா மாரியின் 'நவ்வி ஸ்டூடியோஸ்' நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர்.

கதாப்பாத்திரங்கள்

இப்படத்தில் பரியேறும் பெருமாள் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பூர்ணியா ரவி, விது, காக்கா முட்டை விக்னேஷ் உள்ளிட்டோரும் படத்தில் இணைந்துள்ளனர்.

வரவேற்பு

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இயக்குநர் மாரி செல்வாராஜிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பானது கிடைத்திருந்தது . இந்த நிலையில் இந்த புதிய படப்பிடிப்பின் தொடக்கம் மற்றும் திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com