

நடிகர் சூரியின் அண்ணன் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தியுள்ளார் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.
மதுரையில் நடைபெற்ற இத்திருமண விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்குமரன், நடிகர் சஞ்சீவ் ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகின் முன்னாள் உச்ச நடிகரான விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார்.
சந்தீப் கிஷப், ஃபரியா அப்துல்லா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
சூரி நடிப்பில் கடைசியாக வெளியான படம் மண்டாடி. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது.