IIFA விழாவில் 12 விருதுகளை வாரிக் குவித்த 'துரந்தர்' - முழு பட்டியல்

'சையாரா' திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனீத் பத்தா, சிறந்த நடிகை விருதை வென்றார்.
IIFA
Published on: 
Summary

26வது சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி (IIFA) விருதுகள் விழாவில் 'துரந்தர்' திரைப்படம் 12 விருதுகளை வென்றுள்ளது.

26வது உலக இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருதுகள் நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில், ஆதித்யா தார் இயக்கிய 'துரந்தர்' திரைப்படம் 12 விருதுகளை வென்றுள்ளது.

துரந்தர் விருதுகள்

இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக ரன்வீர் சிங் சிறந்த நடிகர் விருதை வென்றார். மேலும் சிறந்த படத்திற்கான விருதுடன், ஆதித்யா தார் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றார்.

சிறந்த மூலக்கதை, சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த வசனம் ஆகிய பிரிவுகளிலும் ஆதித்யா தார் விருதுகளை வென்றுள்ளார்.

அதே படத்தில் நடித்ததற்காக சஞ்சய் தத் சிறந்த துணை நடிகராகவும், அக்ஷய் கண்ணா சிறந்த வில்லனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

'துரந்தர்' படத்திற்காக ஷஷ்வத் சச்தேவ் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் வென்றார்.

சையாரா

மறுபுறம், 'சையாரா' திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனீத் பத்தா, சிறந்த நடிகை விருதை வென்றார்.

'சையாரா' திரைப்பட பாடலுக்காக இர்ஷாத் கமீல் சிறந்த பாடலாசிரியர் விருதையும், பஹீம் அப்துல்லா சிறந்த பின்னணிப் பாடகர் விருதையும், ஸ்ரேயா கோஷல் சிறந்த பின்னணிப் பாடகர் விருதையும் பெற்றனர்.

பிற விருதுகள்

'ஜாலி எல்.எல்.பி 3' திரைப்படத்தில் நடித்ததற்காக ஹுமா குரேஷி சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.

'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' சிறந்த சர்வதேச திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் இயக்கிய 'தி பேட்ஸ் ஆஃப் பாலிவுட்', சிறந்த வலைத்தொடர் மற்றும் சிறப்பாக இயக்கப்பட்ட தொடருக்கான இரண்டு விருதுகளை வென்றது.

'பாதாள் லோக் சீசன் 2' தொடரில் நடித்ததற்காக ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் திலோத்தமா ஷோம் ஆகியோர் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றனர்.

X