ரூ.2000 கோடி வசூலை நெருங்கிய துரந்தர் 2.. ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு - எங்கு? எப்போது பார்க்கலாம்?

இரண்டாம் பாகம் இந்தியாவில் மட்டுமே ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ரூ.2000 கோடி வசூலை நெருங்கிய துரந்தர் 2.. ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு - எங்கு? எப்போது பார்க்கலாம்?
Published on

இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் படம் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய உளவாளியை பற்றிய கதைக்களத்தில் இப்படம் அமைந்திருந்தது. இதன் 2-ம் பாகமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் கடந்த மார்ச் 19ல் வெளியாகி முதல் படத்தைப் போல வரவேற்பை பெற்று வருகிறது.

இரண்டாம் பாகம் ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இன்னும் திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருப்பதால் ரூ.2000 கோடி வசூலை தொடும் என்று கணிக்கப்படுகிறது.

துரந்தர் 2 திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் மே 14 ஆம் தேதி துரந்தர் 2 வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துரந்தர் முதல் பாகம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஜப்பான் நாட்டில் ஜூலை 10 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com