காதல் கதையில் துருவ் விக்ரம்... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
காதல் கதையில் துருவ் விக்ரம்... புதியப் பட அறிவிப்பு!
Published on

அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் துருவ் விக்ரம் புதிய காதல் கதை ஒன்றில் நடிக்கிறார்.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் எர்னேனி, ரவி சங்கர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.

பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு துருவ் எந்தப் படத்திலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரம்மன், ஆதித்யா வர்மா படங்களில் உதவி இயக்குநராக இருந்த கரண் அரவிந்த் குமார் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com