

இயக்குநர் சீனு ராமசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ராதிகா சரத்குமார், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் தர்மதுரை.
வைரமுத்து வரிகளில் உருவான படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தை ஸ்டூடியோ 9 சார்பில் ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார்.
தற்போதுவரை ரசிகர்களிடையே பேசப்பட்டும் வரும் இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அக்.23ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படமும் அடுத்த மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.