Kara | கர படத்தின் 2வது சிங்கிள் அப்டேட்

கர திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
Kara | கர படத்தின் 2வது சிங்கிள் அப்டேட்
Published on

நடிகர் தனுஷ் தற்போது, போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். `கர' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது. பட வெளியீட்டை ஒட்டி இந்தப் படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போஸ்டர்கள் கடந்த சில நாட்களாக அறிமுகம் செய்யப்பட்டன.

இதில், நடிகர் பிருத்வி பாண்டியராஜன் "முருகேசன்" என்ற கதாபாத்திரத்திலும், கே.எஸ். ரவிக்குமார் "கந்தசாமி" என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ரீஜா ரவி "தனம்" என்ற கதாபாத்திரத்திலும், மமிதா பைஜூ "செல்லி" என்ற கதாபாத்திரத்திலும், கருணாஸ் "காசி மாயன்" என்ற கதாபாத்திரத்திலும், சுராஜ் வெஞ்சரமூடு "பரதன்" என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தி இருந்தது.

கர திரைப்படம் வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், கர திரைப்படத்தின் 2வது சிங்கிள் நாளை (ஏப்ரல் 8) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com