தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்: ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தனுஷின் 'காரா' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கயாடு லோஹருக்கு கிடைத்தது.
Dhanush-Kayadu Lohar
Published on
Summary

இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் கயாடு லோஹர் தோன்றி நடனமாடிய 'பவழ மல்லி' என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றார்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார். அப்போது தமிழ் சினிமாவில் அவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் யார் என்ற கேள்விக்கு, எந்தவித தயக்கமுமின்றி நடிகர் தனுஷின் பெயரை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தனுஷைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை

இந்த உரையாடலின் போது, "தமிழ் சினிமாவில் உங்களின் ஃபேவரிட் ஹீரோ யார்?" என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, புன்னகையுடன் பதிலளித்த கயாடு லோஹர், "தனுஷ், தனுஷ், தனுஷ் மட்டும்தான்! தமிழ் சினிமாவில் அவரைத் தவிர வேறு யாருக்கும் அந்த இடத்தில் வாய்ப்பே இல்லை," என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.

கைநழுவிய வாய்ப்பு

கயாடு லோஹர் இதுவரை தனுஷுடன் இணைந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான தனுஷின் 'காரா' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், பிற படங்களின் படப்பிடிப்பு தேதிகளுடன் ஏற்பட்ட கால்ஷீட் குழப்பம் காரணமாக அந்த வாய்ப்பை அவர் தவறவிட நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதீப் ரங்கநாதனுடன் நடித்த 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான கயாடு லோஹர், அதன்பின் அதர்வாவுடன் 'இதயம் முரளி' படத்தில் நடித்திருந்தார். மேலும், இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் அவர் தோன்றி நடனமாடிய 'பவழ மல்லி' என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றார்.

தற்போது ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள 'இம்மார்ட்டல்' திரைப்படம் மற்றும் துல்கர் சல்மானுடன் நடித்த 'ஐ அம் கேம்' ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டிற்காக அவர் காத்திருக்கிறார். இவை தவிர, சூர்யாவின் 48-வது திரைப்படம், சிவகார்த்திகேயன் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் 'மஞ்சநெத்தி' உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களிலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com