நயன்தாரா தோற்றத்தில் திருநங்கை மாடல் தீப்தி கல்யாணி - இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!

மூக்குத்தி அம்மன்-2 கெட்டப்பில் கேரள கோவிலில் தீப்தி கல்யாணி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
Deepthi Kalyani - Nayanthara
Published on: 
Summary

பிரபல நடிகை நயன்தாராவின் தோற்றத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் திருநங்கை நடிகையும் மாடலுமான தீப்தி கல்யாணியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகின்றன.

நடிகை சில்க் ஸ்மிதாவின் தோற்றம்

கேரளாவைச் சேர்ந்த தீப்தி கல்யாணி, ஒரு திருநங்கை நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞராகத் தனது தனித்துவமான திறமைகளால் கவனம் பெற்று வருபவர்.

சினிமா நிகழ்வுகள் மற்றும் கடைத் திறப்பு விழாக்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வரும் இவர், சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி பிரபலமாகி வருகிறார். முன்னதாக, மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தோற்றத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்றன.

'மூக்குத்தி அம்மன்-2' கெட்டப்பில் தீப்தி

அந்த வரிசையில், தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் தோற்றத்தில் தீப்தி கல்யாணி பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

குறிப்பாக, 'மூக்குத்தி அம்மன்-2' படத்தில் நயன்தாரா தோன்றும் அம்மன் கெட்டப்பில், கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் தீப்தி கல்யாணி சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தீப்தி டிரெண்டிங்

மேலும், நயன்தாராவின் பிரபலமான ஆடை வடிவமைப்புகளில் கடைத் திறப்பு விழாக்களில் பங்கேற்று வரும் தீப்தி கல்யாணியின் புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகின்றன.

X