VIDEO: நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தை திடீரென கிள்ளிய ரசிகர்- பிறந்தநாள் விழாவில் பரபரப்பு

பிறந்தநாளையொட்டி ரச்சிதா ராமின் பிரமாண்ட கட் அவுட்கள் வைத்து பட்டாசு வெடித்து ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர்.
நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தை திடீரென கிள்ளிய ரசிகர்
நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தை திடீரென கிள்ளிய ரசிகர்
Published on: 
Summary

ரச்சிதா ராமின் 34-வது பிறந்தநாளில் ரசிகர் ஒருவர் திடீரென அவரது கன்னத்தை கிள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சியடைந்த நடிகை பின்னர் புன்னகையுடன் ரசிகரின் அன்பை ஏற்றுக்கொண்டார்.

ரஜினி நடித்த ‘கூலி’ படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ரச்சிதா ராம். கன்னட திரை உலகில் பிரபல நடிகையான ரச்சிதா ராம் தனது 34-வது பிறந்தநாளை ரசிகர்கள் புடைசூழ நேற்று நள்ளிரவு கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி ரச்சிதா ராமின் பிரமாண்ட கட் அவுட்கள் வைத்து பட்டாசு வெடித்து ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர்.

இதைத்தொடர்ந்து ரச்சிதா ராம் ரசிகர்களை நேரில் சந்தித்தார். ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொருவராக அவருடன் செல்பி எடுத்தபடி சென்றனர்.

அந்தவகையில் ரச்சிதா ராமுடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுத்தார். செல்பி எடுத்து முடிந்ததும் யாரும் எதிர்பாராத வகையில் அந்த ரசிகர் திடீரென ரச்சிதா ராமின் இரண்டு கன்னத்தையும் பிடித்து கிள்ளினார்.

இதனால் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த ரச்சிதா ராம் ரசிகரின் அன்பை நினைத்து புன்னகைத்தார். திடீரென ரச்சிதா ராமின் கன்னத்தை பிடித்து ரசிகர் கிள்ளிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரமாண்ட பிறந்தநாள் கொண்டாட்டம் ரசிகர் கொடுத்த ‘திடீர் ஷாக்’ ரச்சிதாவின் 34-வது பிறந்தநாளை வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளார் ரச்சிதாவின் தீவிர ரசிகர்.

X

Maalai Malar
www.maalaimalar.com