

இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் மாலைமலர் யூடியூப்-க்கு பேட்டியளித்தார்.
இந்த காலத்து இசை குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:-
எங்கள் தொழிலில் மற்றவர்கள் ஈடுபட்டு எப்படி ஆலோசனைகள் சொல்லவில்லையோ, அதேபோல் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபுவை நாங்கள் தொந்தரவு செய்யமாட்டோம். தொந்தரவு (Disturb) செய்தால் மாறிடும். அவர்கள் வாழும் காலம் வேற. அவர்கள் மேற்கத்திய பாடல்கள் கேட்கிறாங்க. அதனால் அப்படி வந்து கொண்டிருக்காங்க.
எனக்கு மேற்கத்திய பாடல்கள் பிடிக்காது. எங்களுக்கு எங்கள் மியூசிக், நாங்கள் வாழ்ந்த மியூசிக், உண்டு உணர்ந்து உடம்பில் சேர்ந்த மியூசிக் இருக்கே, இதுதான் எங்களுக்கு பிடிக்கும்.
இப்போது டமுக்கு டப்பா, டமுக்கு டப்பா, டமுக்கு டப்பான்னு அடிச்சிட்டு இருக்காங்க. மனசுல ரொம்ப நாள் நிற்கும் லேட்டஸ்ட் சாங்கை சொல்ல முடியுமா?
என் மகன் பிரேம் ஜி உள்பட இப்போதுள்ளவர்கள் யாராவது நல்ல பாட்டு போட்டிருக்காங்களா? மனசில் நிக்கிற மாதிரி அனிருத்தின் ஒரு பாடலை சொல்லுங்க...?
மியூசிக் முன்பு மாதிரி இல்லை என்பதை இப்போதுள்ளவர்கள் ஒத்துக்கொள்ளமாட்டீங்க. பாஷையே தெரியாமல் பாடல் போடுறாங்க. ஜெயிலர் 2-ல் இரண்டு பாடல்கள் நல்லாயிருக்கு. ஹந்தி சொல் உள்ளிட்டவைகளை போட்டிருக்காங்க. தமிழ் அடையாளம் எங்கும் காட்டப்படவில்லை என்றாலும் அவர்களுக்கு உதவி செய்திருக்கு.
அனிருத் நியூ ஸ்டைலை கிரியேட் பண்ணிருக்காரு. தமிழ் படத்திற்கு அந்த மாதிரி பாடல் பொருந்துமா? என்பதை யோசிக்க வேண்டும். ஆனா நல்லாயிருக்கு.. வேற சவுண்ட் கொடுத்தாலும் இடத்தை முழுமையாக Fill செய்திருப்பதை ஒத்துக்கணும்.