Brother டிரைலர் வெளியானது - பழைய ஃபார்மில் களம் இறங்கும் ஜெயம் ரவி

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரதர்.பிரியங்கா மோகன் பூமிகா, சரண்யா, பொன்வண்ணன், நட்டி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
Brother டிரைலர் வெளியானது - பழைய ஃபார்மில் களம் இறங்கும் ஜெயம் ரவி
Published on

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரதர்.

பிரியங்கா மோகன் பூமிகா, சரண்யா, பொன்வண்ணன், நட்டி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

அக்கா-தம்பி உறவை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படம் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இத்திரைப்படம் ஜெயம் ரவிக்கு வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி படத்தின் புரமோஷன் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் துபாய் சொகுசு கப்பலில் இந்த படத்தின் விழா நடைபெற்றுள்ளது. விழாவில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்பட பட குழுவினர் பங்கேற்றனர்.

திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில். திரைப்படத்தின் டிரைலர் வெளியிடாமல் இருந்தனர். ஆனால் தற்பொழுது படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

திரைப்படம் ஒரு கமர்ஷியல் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறடுஹ். ராஜேஷ் திரைப்படத்தில் வரும் சிக்நேச்சர் வசனமான நண்பேண்டா போல் இப்படத்தில் அக்கா டா என்று சொல்லுவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com