நவம்பரில் வெளியாகிறது 'பிளாக் கோல்ட்'

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இப்படத்தின் படிப்பிடிப்பு நடைபெற்றது.
பிளாக் கோல்ட் பட நடிகர்கள்
பிளாக் கோல்ட் பட நடிகர்கள்
Published on: 
Summary

நவம்பர் 13-ந்தேதி வெளியாகும் 'பிளாக் கோல்ட்' திரைப்படம், நடுத்தர குடும்ப வாலிபர் மற்றும் வணிக மாபியாக்களுக்கிடையேயான பிரச்சனைகளை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் விவரிக்கிறது. தீரண் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிளாக் கோல்ட்

தீரண் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி நடித்துள்ள படம் ‘பிளாக் கோல்ட்’. இப்படத்தில் பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை எம்எம் ஸ்டூடியோஸ் சார்பில் எம்.மூர்த்தி தயாரித்துள்ளார். இப்படத்தை சந்தோஷ் குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்ய கவாஸ்கர் அவினாஷ் இசை அமைத்துள்ளார்

நடுத்தர குடும்பத்து வாலிபருக்கும் பெரிய வணிக மாபியாக்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை சொல்லும் இப்படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இப்படத்தின் படிப்பிடிப்பு நடைபெற்றது.

U/A சான்றிதழ்

சில தினங்களுக்கு முன்பு ‘பிளாக் கோல்ட்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், இப்படத்தில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ‘பிளாக் கோல்ட்’ படம் நவம்பர் மாதம் 13-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com