பிபாஷா பாசு வாங்கிய புரோட்டீன் பவுடர் முழுவதும் ‘புழுக்கள்’ - நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு

புரோட்டீன் பவுடரில் புழு இருந்தது குறித்து நடிகை பிபாஷா பாசு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Bipasha Basu protein powder
Published on
Summary

பாலிவுட் நடிகை பிபஷா பாசு, தான் புதிதாக வாங்கிய புரோட்டீன் பவுடர் முழுவதும் சிறு புழுக்கள் இருந்ததாக புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை டேக் செய்துள்ளார்.

Summary

புரோட்டீன் பவுடரில் புழுக்கள்

நடிகை பிபாஷா பாசு சமீபத்தில் ஐசோபியூர் என்ற புரோட்டீன் பவுடரை புதிதாக வாங்கியுள்ளார். அவர் அதை சாப்பிடுவதற்காக திறந்தபோது, உள்ளே சிறு சிறு புழுக்கள் அதிகளவில் இருந்துள்ளன.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதை விடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். மேலும் மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையராக துகாராம் முண்டேவை டேக் செய்து, நீங்கள் தான் எங்கள் ஒரே நம்பிக்கை என்றும் பதிவிட்டார்.

மேலும் நீங்கள் நடவடிக்கை எடுக்கும் போதுதான் நாங்கள் வாங்கும் பொருட்களில் கெட்டுப்போன மற்றும் கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் இருக்காது என்றும் அவர் பதிவிட்டார்.

உணவு பாதுகாப்புத் துறை

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் முண்டே, மும்பை மற்றும் பிற இடங்களில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற உணவு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் பால் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களில் கலப்படம் நடந்ததாக கூறப்படும் விதிமீறல்கள் தொடர்பான ஆய்வுகளையும் நடத்தினார்.

மேலும் அவர் அரசாங்கத்தின் உத்தரவுகளை பின்பற்றாத பல நிறுவனங்களின் உரிமங்களையும் ரத்து செய்தார்.

நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு

இதையடுத்து பிபாஷா பாசு வெளியிட்ட பதிவுக்கு ஆதரவளிக்கும் வகையில், மும்பையில் நடந்த விழா ஒன்றில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கருப்பு நிற டீ-ஷர்ட் ஒன்றை அணிந்து வந்தார்.

அவர் அணிந்து வந்த டீ-ஷர்ட்டில் ‘டீம் துகாராம் முண்டே’ என்று எழுதியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நடிகை ட்விங்கிள் கன்னா பதிவு

அதேபோன்று பிபாஷா பாசுவுக்கு ஆதரவாக நடிகை ட்விங்கிள் கன்னாவும், சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அவர் அந்த பதிவில், “ஒரு அரசு அதிகாரி தனது வேலையை செய்வதை பார்ப்பது, உண்மையிலேயே அரிதான ஒன்றாக உள்ளது” என்று அரசாங்க அதிகாரிகளை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com