பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு: டாஸ்க் போட்டியில் நடிகை ஆனந்தி காயம்! லட்சுமி பிரியா மீது போட்டியாளர்கள் குற்றச்சாட்டு

போட்டியின் நடுவே, சக போட்டியாளரான லட்சுமி பிரியா, நடிகை ஆனந்தியை தள்ளியதாகக் கூறப்படுகிறது.
Actress Anandhi -Lakshmi Priya
Published on
Summary

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல்களும் சவால்களும் அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் வைக்கப்பட்ட சிறப்பு போட்டியின் போது எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சின்னத்திரையின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வெற்றிகரமாக இரண்டாம் வாரத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பிற்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்து வரும் இந்த சீசனில், தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே நடைபெற்ற கடுமையான டாஸ்க் ஒன்றின் போது, நடிகை ஆனந்தி எதிர்பாராதவிதமாக காயமடைந்து அழுது துடித்த சம்பவம் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோதிக்கொண்ட போட்டியாளர்கள்

இந்த வாரத்திற்கான தலைவராக ஷமா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டின் அதிகாரத்தையும் சுவாரஸ்யத்தையும் தீர்மானிக்கும் புதிய போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. இதில் வீட்டின் அனைத்து போட்டியாளர்களும் தீவிரமாகப் பங்கேற்றனர். போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியபோது, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

காயமடைந்த ஆனந்தி

போட்டியின் நடுவே, சக போட்டியாளரான லட்சுமி பிரியா, நடிகை ஆனந்தியை தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஆனந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர், டாஸ்க் களத்திலேயே கண்ணீர் விட்டு அழுது கதறினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக போட்டியாளர்கள், உடனடியாக போட்டியை நிறுத்திவிட்டு ஆனந்திக்கு உதவ ஓடிவந்தனர். காயமடைந்த அவரைத் தாங்கிப் பிடித்து, தூக்கிச்சென்று டாஸ்க் பகுதியிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

இந்த விபத்தைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் சூழலே முற்றிலும் மாறியுள்ளது. போட்டிகளில் எல்லை மீறி நடந்து கொள்ளும் போட்டியாளர்கள் மீது பிக்பாஸ் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆனந்தியை காயப்படுத்திய லட்சுமி பிரியாவுக்கு 'ரெட் கார்டு' வழங்கி வெளியேற்ற வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது ஆனந்தி மருத்துவ சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வருகிறாரா அல்லது போட்டியில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டுள்ளாரா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இனிவரும் எபிசோட்களில் தெரியவரும். பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் நேரலையாகக் காணலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com