பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் 'பேங்க்': அர்ஜுனுக்கு ஜோடியாக குட்டி ராதிகா!

முக்கிய காட்சிகளை மும்பை பெங்களூரு பாங்காக் நகரங்களில் பிரம்மாண்டமாக சர்வதேச தரத்தில் படமாக்கப்பட்டது உள்ளது.
Bank Movie
Published on: 
Summary

TSR மொபின் புரொடக்‌ஷன் வழங்க, எம்.டி. சலார் பெய்க் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். சமீர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய திரைப்படம் 'பேங்க்' (Bank).

சர்வதேச அளவிலான நிதிக்குற்ற பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக குட்டி ராதிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.

நட்சத்திரப் பட்டாளம்

இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் இயற்கை படம் மூலம் பிரபலமான நடிகை குட்டி ராதிகாவுடன் இணைந்து திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ஜே.டி. சக்கரவர்த்தி, அர்ச்சனா, கவுதம், சோனி சிரிஸ்டா, ராம் ஜெகன், கே. விஸ்வநாத் சமீர், அசோக் குமார் மற்றும் அபித் பூசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு அமீர் லால் ஒளிப்பதிவு செய்ய, சுபாஷ் இசையமைத்துள்ளார்.

ஹனி டிராப் சதியும் அதிரடி திருப்பங்களும்

திரைப்படத்தின் விறுவிறுப்பான கதைக் களம் குறித்து இயக்குநர் எஸ்.எஸ். சமீர் கூறுகையில், "ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை 'ஹனி டிராப்' என்ற ஆபத்தான சதித் திட்டம் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜே.டி. சக்கரவர்த்தி கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்.

ஒட்டுமொத்த தேசத்தையும் அச்சுறுத்தும் அந்தப் பேராபத்தை, கதாநாயகனான அர்ஜுன் தனது அசாத்திய புத்திசாலித்தனத்தாலும் அதிரடி ஆக்ஷனாலும் எப்படி முறியடிக்கிறார் என்பதே இப்படத்தின் முக்கிய கதையாகும்" என்று விவரித்தார்.

மும்பை டூ பாங்காக் - சர்வதேச தரத்தில் தயாரிப்பு

இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக மிக விலை உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் கதையோட்டத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பல காட்சிகள் மும்பை, பெங்களூரு போன்ற இந்தியாவின் முன்னணி நகரங்களிலும், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரிலும் மிக பிரம்மாண்டமான முறையில் சர்வதேச தரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தின் அனைத்து இறுதிக்கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படம் மிக விரைவில் தியேட்டர்களில் உலகெங்கும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வர இருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

X