அக்ஷய் குமாரின் படே மியன் சோட்டே மியன் - டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அக்ஷய் குமார் - டைகர் ஷெராஃப் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
அக்ஷய் குமாரின் படே மியன் சோட்டே மியன் - டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

இந்திய திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் "படே மியன் சோட்டே மியன்" திரைப்படத்தின் புது அறிவிப்பு வெளியாகி உள்ளது. பூஜா எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள "படே மியன் சோட்டே மியன்" படத்தின் டிரைலர் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது. டிரைலர் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ போஸ்டரில் படே மியன்-ஆக அக்ஷய் குமார் மற்றும் சோட்டே மியன்-ஆக டைகர் ஷெராஃப் மற்றும் மனுஷி சில்லர் மற்றும் ஆல்யா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன. இந்த படத்தை அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிருத்விராஜ் சுகுமாறன், சோனாக்ஷி சின்ஹா, ஆல்யா மற்றும் மனுஷி சில்லர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com