

நிகில் முரளி இயக்கத்தில் ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ளப் படம் ஹலோ காதல்.
காதல் களத்தில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் முதல் பாடலான ‘கண்ணும் கண்ணும்’ வெளியாகி உள்ளது.
படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். விவேக் வரிகளில், கபிலன், சிவாங்கி இணைந்து பாடலை பாடியுள்ளனர்.
தி ஷோ பீப்பிள், சில்வர் கிரைன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.
ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் மிஸ்டர் எக்ஸ். தற்போது, பா. இரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். வேட்டுவம் இந்தாண்டு இறுதியில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.