ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ டிரெய்லர் வெளியானது!

ஜூன்.25ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ டிரெய்லர் வெளியானது!
Published on

​ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா, இந்திரன்ஸ், சுனில், நிகிலா விமல், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் அனந்தன் காடு.

மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. காட்டைப் பின்னணியாகக் கொண்டு, அங்கு வாழும் பழங்குடி மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே நடக்கும் அரசியல் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதைக்களமாக படம் அமைந்துள்ளது.

இப்படம் ஜூன்.25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com